• Nov 24 2024

பொதுத் தேர்தலில் அதிரடி; சஜித்துடன் கூட்டணி அமைக்க தயாராகும் ரணில் தரப்பு

Chithra / Sep 27th 2024, 4:41 pm
image

 

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து களமிறங்க, ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் நாட்டில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுதொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரது  அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஒரே தரப்பினர்தான் இருக்கிறார்கள்.

இரண்டு கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைத்தாலே பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி கிடைக்கும்.

எனவே, இதனை சாத்தியப்படுத்த இரண்டு கட்சிகளும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும்.

எமது தரப்பினருடன் பேச்சு நடத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பினரும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதோடு, தேசிய பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றுக்கு வரமாட்டார். 

எனவே, சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க நாமும் நடவடிக்கை எடுப்போம்.

நாம் தொலைப்பேசியுடன் கூட்டணியமைத்தால் இந்த நடவடிக்கையை எடுப்பதில் பிரச்சினைகள் இல்லை.

தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, எமது தரப்பில் பெரும்பான்மையோர் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளனர் என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் அதிரடி; சஜித்துடன் கூட்டணி அமைக்க தயாராகும் ரணில் தரப்பு  பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து களமிறங்க, ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் நாட்டில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுதொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரது  அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஒரே தரப்பினர்தான் இருக்கிறார்கள்.இரண்டு கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைத்தாலே பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி கிடைக்கும்.எனவே, இதனை சாத்தியப்படுத்த இரண்டு கட்சிகளும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும்.எமது தரப்பினருடன் பேச்சு நடத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பினரும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதோடு, தேசிய பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றுக்கு வரமாட்டார். எனவே, சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க நாமும் நடவடிக்கை எடுப்போம்.நாம் தொலைப்பேசியுடன் கூட்டணியமைத்தால் இந்த நடவடிக்கையை எடுப்பதில் பிரச்சினைகள் இல்லை.தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, எமது தரப்பில் பெரும்பான்மையோர் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளனர் என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement