• May 19 2024

இலங்கையில் 34 வருடங்களின் பின் பெருந்தொகை செலவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற நிகழ்வு! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 7:06 am
image

Advertisement

இலங்கையில் 34 வருடங்களுக்குப் பின்னர் ஐந்தாவது தடவையாகவும் குடியரசு ஊர்வலம் நேற்று கண்டியில் தற்போது சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கும் நாட்டின் மீது சர்வதேச ஈர்ப்பை பெறுவதற்கும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அர்த்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர் தலைமையில் தியவடனை நிலங்க தேலவின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, கண்டி நகர் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

முப்படையினர், விசேட அதிரடிபடையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட 3000 இற்கும் அதிகமான பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இலங்கையின் முதல் குடியரசு ஊர்வலம் 1854 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலையில் 1875, 1981 மற்றும் 1987ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கையில் 34 வருடங்களின் பின் பெருந்தொகை செலவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற நிகழ்வு SamugamMedia இலங்கையில் 34 வருடங்களுக்குப் பின்னர் ஐந்தாவது தடவையாகவும் குடியரசு ஊர்வலம் நேற்று கண்டியில் தற்போது சிறப்பாக இடம்பெற்றது.தேசிய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கும் நாட்டின் மீது சர்வதேச ஈர்ப்பை பெறுவதற்கும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அர்த்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர் தலைமையில் தியவடனை நிலங்க தேலவின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது.இதையடுத்து, கண்டி நகர் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.முப்படையினர், விசேட அதிரடிபடையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட 3000 இற்கும் அதிகமான பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.இலங்கையின் முதல் குடியரசு ஊர்வலம் 1854 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலையில் 1875, 1981 மற்றும் 1987ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement