• Nov 26 2024

இலங்கையில் மோசமான நிலையில் காற்றின் தரம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

Chithra / Jan 17th 2024, 7:48 am
image

 

கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அல்லது பிற ஆசிய நாடுகளில் இருந்து வரும் காற்று ஓட்டத்துடன் காற்றின் தரம் மிகவும் சாதகமற்றதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் காற்றின் தரம் குறையும் நிலை ஏற்படுவது சாதாரண நிகழ்வு எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தின் தன்மையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது ஒரு தற்காலிக நிலை என நம்புவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி கூறியுள்ளார்.

இலங்கையில் மோசமான நிலையில் காற்றின் தரம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.  கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியா அல்லது பிற ஆசிய நாடுகளில் இருந்து வரும் காற்று ஓட்டத்துடன் காற்றின் தரம் மிகவும் சாதகமற்றதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்தக் காலப்பகுதியில் காற்றின் தரம் குறையும் நிலை ஏற்படுவது சாதாரண நிகழ்வு எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.வளிமண்டலத்தின் தன்மையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது ஒரு தற்காலிக நிலை என நம்புவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement