• May 02 2024

இணையத்தில் சக்கை போடு போடும் அஜித்தின் 'காசேதான் கடவுளடா' பாடல்!

Sharmi / Dec 18th 2022, 9:40 pm
image

Advertisement

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. குறித்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். குறித்த படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், குறித்த  படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்றது.


குறித்த படத்தின் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் இன்றைய தினம்  மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், அறிவித்தபடி சரியாக காசேதன் கடவுளடா பாடலின் லிரிக்கல் காணொளி வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

குறித்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இணையத்தில் சக்கை போடு போடும் அஜித்தின் 'காசேதான் கடவுளடா' பாடல் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. குறித்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். குறித்த படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், குறித்த  படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்றது.குறித்த படத்தின் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் இன்றைய தினம்  மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், அறிவித்தபடி சரியாக காசேதன் கடவுளடா பாடலின் லிரிக்கல் காணொளி வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. குறித்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement