• May 18 2024

அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்! புதிய யோசனையை முன்மொழிந்துள்ள எம்.பி.! samugammedia

Chithra / Jun 27th 2023, 10:05 am
image

Advertisement

இலங்கையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்து வருவோரை அந்த பதவியை விட்டு விலகுமாறு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல கோரியுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களுக்காக மாதமொன்றுக்கு பத்து கோடி ரூபா செலவிடப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக காணப்படும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். 

கடந்த மே மாதம் முதல் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெட் ஸ்கேனர் ஊடாக செய்யப்படும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.


இதனை தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொண்டால் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படும். 

வைத்தியசாலைகளில் மருந்து பொருளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் அமைச்சர்கள் வழமை போன்று வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதுடன், தங்களது பணியாளர்களையும் வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களின் ஊடாக நாட்டுக்கு நன்மை கிடைக்கவில்லை. கிடைக்கும் வரப் பிரசாதங்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். பயன் எதுவும் இன்றி அமைச்சுப் பதவி வகிப்பதில் என்ன அவசியம்.

அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் பதவி விலகுவதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேர் நியமிக்கப்பட்டு ஏனையவர்கள் செயற்குழுக்களின் ஊடாக நாட்டுக்கு சேவை வழங்க முடியும் என தாம் முன்மொழிவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் புதிய யோசனையை முன்மொழிந்துள்ள எம்.பி. samugammedia இலங்கையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்து வருவோரை அந்த பதவியை விட்டு விலகுமாறு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல கோரியுள்ளார்.களுத்துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர்களுக்காக மாதமொன்றுக்கு பத்து கோடி ரூபா செலவிடப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக காணப்படும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். கடந்த மே மாதம் முதல் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெட் ஸ்கேனர் ஊடாக செய்யப்படும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.இதனை தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொண்டால் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படும். வைத்தியசாலைகளில் மருந்து பொருளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் அமைச்சர்கள் வழமை போன்று வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதுடன், தங்களது பணியாளர்களையும் வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இராஜாங்க அமைச்சர்களின் ஊடாக நாட்டுக்கு நன்மை கிடைக்கவில்லை. கிடைக்கும் வரப் பிரசாதங்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். பயன் எதுவும் இன்றி அமைச்சுப் பதவி வகிப்பதில் என்ன அவசியம்.அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் பதவி விலகுவதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேர் நியமிக்கப்பட்டு ஏனையவர்கள் செயற்குழுக்களின் ஊடாக நாட்டுக்கு சேவை வழங்க முடியும் என தாம் முன்மொழிவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement