• Nov 28 2024

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்து..!

Sharmi / Sep 23rd 2024, 9:36 am
image

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. 

இது தொடர்பில் வெளியிடப்பட்ட  வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அமைதியான முறையில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். 

இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் வலிமை மற்றும் அமைதியான மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் குடிமக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

ஒரு நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. 

பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அடிப்படையிலான எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். 

நமது நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்து. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட  வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அமைதியான முறையில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் வலிமை மற்றும் அமைதியான மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் குடிமக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.ஒரு நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அடிப்படையிலான எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நமது நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement