• May 18 2024

இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு! SamugamMedia

IMF
Chithra / Feb 26th 2023, 8:44 am
image

Advertisement

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் தீர்மானித்துள்ளன.

இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய பெங்களூரில் நேற்று முடிவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.

கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள்,  உயர்ந்த நிலையில் இருந்தன.

இந்தநிலையில் இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலிருந்து உருவாகும் அதிர்ச்சிகளால் இந்த நிலைமைகள் மோசமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு SamugamMedia இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் தீர்மானித்துள்ளன.இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.இந்திய பெங்களூரில் நேற்று முடிவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.பல நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள்,  உயர்ந்த நிலையில் இருந்தன.இந்தநிலையில் இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலிருந்து உருவாகும் அதிர்ச்சிகளால் இந்த நிலைமைகள் மோசமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement