• Dec 04 2024

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு..!

Sharmi / Oct 10th 2024, 7:30 pm
image

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூதாட்டி உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று(09) தனது வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று(10) முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் நெல்லியடி  பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர்மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். 

தடயவியல் பொலிசாரும் தடயங்களைப் பெற்றுக் கொண்டனர். 

அதேவேளை மூதாட்டியின் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலிசாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி  உத்தரவிட்டார்.

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு. யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது.குறித்த மூதாட்டி உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று(09) தனது வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று(10) முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் நெல்லியடி  பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர்மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். தடயவியல் பொலிசாரும் தடயங்களைப் பெற்றுக் கொண்டனர். அதேவேளை மூதாட்டியின் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலிசாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி  உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement