• May 18 2024

இலங்கையிலுள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவித்தல்! samugammedia

Chithra / Jul 6th 2023, 7:03 am
image

Advertisement

இலங்கையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

(புதன்கிழமை) இடம்பெற்ற நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி குற்றவியல் நீதிமன்றங்களில் 5,550 சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் 4,312 பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்..

இந்த சூழ்நிலையில் இலங்கையர்களாகிய நாம் வெட்கப்படவும், வருந்தவும் வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் இலங்கை மக்களின் கலாசாரத்தை மற்ற நாடுகளுக்கு அம்பலப்படுத்துகின்றன. இந்த தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த பத்து மாதங்களில் நாடாளுமன்றத்தால் 25 சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கையின் நீதித்துறை அமைப்பில் சுமார் 1,127,265 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முதல் குற்றவியல் நீதிமன்றங்கள் வரை 399 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையிலுள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவித்தல் samugammedia இலங்கையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(புதன்கிழமை) இடம்பெற்ற நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி குற்றவியல் நீதிமன்றங்களில் 5,550 சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் 4,312 பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த சூழ்நிலையில் இலங்கையர்களாகிய நாம் வெட்கப்படவும், வருந்தவும் வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் இலங்கை மக்களின் கலாசாரத்தை மற்ற நாடுகளுக்கு அம்பலப்படுத்துகின்றன. இந்த தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.கடந்த பத்து மாதங்களில் நாடாளுமன்றத்தால் 25 சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.இலங்கையின் நீதித்துறை அமைப்பில் சுமார் 1,127,265 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முதல் குற்றவியல் நீதிமன்றங்கள் வரை 399 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement