கொழும்பை வந்தடையும் மற்றுமொரு பெட்ரோல் கப்பல்! அமைச்சர் தகவல்

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இன்று இரவு கொழும்பை வந்தடையும் பெட்ரோல் நாளை இறக்கப்படும் என்றும் அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் ஏற்றுமதிக்கான கொடுப்பனவுகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நேற்று மற்றும் இன்றைய தினத்திற்கான தேசிய எரிபொருள் கியு.ஆர் அட்டை அமைப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை