• May 18 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் பிளவு...!samugammedia

Sharmi / Aug 25th 2023, 11:24 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிகளைப் பெறுவதற்கு அக்குழுவினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசியும் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த கவலையினால் தயாசிறி ஜயசேகர மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கட்சியின் விவகாரங்களில் சற்று விரக்தியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தயாசிறி ஜயசேகரவின் ஆசனத்தில் நடைபெறவிருந்த கட்சி மாநாடும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன் கருதி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் பிளவு.samugammedia முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிகளைப் பெறுவதற்கு அக்குழுவினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசியும் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.இந்த கவலையினால் தயாசிறி ஜயசேகர மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கட்சியின் விவகாரங்களில் சற்று விரக்தியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக தயாசிறி ஜயசேகரவின் ஆசனத்தில் நடைபெறவிருந்த கட்சி மாநாடும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன் கருதி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement