• Nov 24 2024

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் வாய் திறக்காத அனுர...! தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முயற்சி- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு...!

Sharmi / Mar 19th 2024, 2:15 pm
image

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது  தொடர்பில் அவர் இன்று(19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆட்சிப் பீடத்திற்கு  வரத் துடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தேசிய இனப்பிரச்சினைக்கு தங்கள் கட்சி சார்பில் எவ்வாறான தீர்வினை வழங்குவோம் என உறுதி பட கூறுவதற்கு துணிச்சல் அற்றவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

பௌத்த சிங்கள மக்களை பகைத்துக்  கொள்ளாமல் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க அனுர நினைக்கிறார்.  

தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசக்கூடாது எனக் கூறும் அனுர, தான் வழங்க நினைக்கும் தீர்வை  வெளிப்படையாக கூற முதுகெலும்பு அற்றவராக இருப்பதுடன் ஏனைய சிங்கள கட்சி தலைவர்களை விட தான் தந்திரமாக தமிழர்களை ஏமாற்றி விடுவேன் என மனப்பால் குடிக்கிறார்.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட தியாகம் அதன் அர்ப்பணிப்பு போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் அனுரகுமார தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை உணவை பெற்றுத் தருவதாக கிளிநொச்சியில் கூறியுள்ளார்.

 மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தமிழர்களின் 1952  ஆண்டு தேர்தல் வரலாற்றை  அனுர படிக்கவில்லை.

அன்றைய தேர்தல் கோசம் தமிழ் மக்களை நோக்கி  சோறா? சுதந்திரமா? என்றவாறே இருந்தது மக்களின் முழுமையான ஆதரவு சுதந்திரம் என்பதாகவே இருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை  பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழர்களின் நிலைப்பாடு உரிமைக்கானதாகவே புள்ளடி மூலம் காட்டப்பட்டது. இதனை அனுரகுமார புரிந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உணவுப் பொருட்களை வன்னிக்கு செல்ல விடாது ராஜபக்ச அரசாங்கம் தடுத்த போது அவர்களுடன் இணைந்து துரோகம் இழைத்து விட்டு இன்று அதே மக்களைப் பார்த்து மூன்று வேளை உணவை தருவோம் என கூறுவதற்கு பதவி ஆசை தானே  காரணம்.  

ஆகவே சிங்கள கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதற்கு  ஐே.வி.பி யும் விதிவிலக்கல்ல எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் வாய் திறக்காத அனுர. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முயற்சி- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது  தொடர்பில் அவர் இன்று(19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கையின் ஆட்சிப் பீடத்திற்கு  வரத் துடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தேசிய இனப்பிரச்சினைக்கு தங்கள் கட்சி சார்பில் எவ்வாறான தீர்வினை வழங்குவோம் என உறுதி பட கூறுவதற்கு துணிச்சல் அற்றவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.பௌத்த சிங்கள மக்களை பகைத்துக்  கொள்ளாமல் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க அனுர நினைக்கிறார்.  தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசக்கூடாது எனக் கூறும் அனுர, தான் வழங்க நினைக்கும் தீர்வை  வெளிப்படையாக கூற முதுகெலும்பு அற்றவராக இருப்பதுடன் ஏனைய சிங்கள கட்சி தலைவர்களை விட தான் தந்திரமாக தமிழர்களை ஏமாற்றி விடுவேன் என மனப்பால் குடிக்கிறார்.தமிழர்களின் விடுதலைப் போராட்ட தியாகம் அதன் அர்ப்பணிப்பு போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் அனுரகுமார தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை உணவை பெற்றுத் தருவதாக கிளிநொச்சியில் கூறியுள்ளார். மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தமிழர்களின் 1952  ஆண்டு தேர்தல் வரலாற்றை  அனுர படிக்கவில்லை.அன்றைய தேர்தல் கோசம் தமிழ் மக்களை நோக்கி  சோறா சுதந்திரமா என்றவாறே இருந்தது மக்களின் முழுமையான ஆதரவு சுதந்திரம் என்பதாகவே இருந்தது.அன்றிலிருந்து இன்று வரை  பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழர்களின் நிலைப்பாடு உரிமைக்கானதாகவே புள்ளடி மூலம் காட்டப்பட்டது. இதனை அனுரகுமார புரிந்து கொள்ள வேண்டும்.முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உணவுப் பொருட்களை வன்னிக்கு செல்ல விடாது ராஜபக்ச அரசாங்கம் தடுத்த போது அவர்களுடன் இணைந்து துரோகம் இழைத்து விட்டு இன்று அதே மக்களைப் பார்த்து மூன்று வேளை உணவை தருவோம் என கூறுவதற்கு பதவி ஆசை தானே  காரணம்.  ஆகவே சிங்கள கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதற்கு  ஐே.வி.பி யும் விதிவிலக்கல்ல எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement