• Nov 17 2024

யாழ்ப்பாண கூட்டத்திற்காக பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இறக்கிய அநுர! குற்றம்சாட்டிய சுமந்திரன்

Chithra / Nov 11th 2024, 1:38 pm
image


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,

ஏதோ விசித்திரமான காரணத்திற்காக ஜனாதிபதி நேற்று மாலை ஆயிரம் பேரை பஸ்கள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து உரையாற்றினார்.

இவ்வாறு பஸ்களில் ஏற்றி வந்தவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஜனாதிபதி சென்று உரையாற்றியிருந்தால் பயணச் செலவு குறைந்து இருக்கும் என்றார்.

அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாண கூட்டத்திற்காக பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இறக்கிய அநுர குற்றம்சாட்டிய சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,ஏதோ விசித்திரமான காரணத்திற்காக ஜனாதிபதி நேற்று மாலை ஆயிரம் பேரை பஸ்கள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து உரையாற்றினார்.இவ்வாறு பஸ்களில் ஏற்றி வந்தவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஜனாதிபதி சென்று உரையாற்றியிருந்தால் பயணச் செலவு குறைந்து இருக்கும் என்றார்.அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement