• Apr 13 2025

ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமியுங்கள்: வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை..!

Sharmi / Apr 8th 2025, 12:20 pm
image

வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆரம்ப வைத்தியசாலையினை சுற்றியுள்ள கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் பிற்பகல் 3மணியளவில் மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் ஒப்படைக்கப்பட்டது. 

குறித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயளாலர் கருத்து தெரிவிக்கையில்,

இப்பிரச்சினை அடிப்படை பிரச்சினையாகவும் இதற்கான தீர்வு மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

அதேவேளை குறித்த கோரிக்கை கடிதத்தில் 500ற்கு மேற்பட்ட கிராம மக்களின் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளதுடன் குறித்த பிரச்சினை தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமியுங்கள்: வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை. வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆரம்ப வைத்தியசாலையினை சுற்றியுள்ள கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் நேற்றைய தினம்(7) ஆளுநர் செயலகத்தில் பிற்பகல் 3மணியளவில் மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயளாலர் கருத்து தெரிவிக்கையில்,இப்பிரச்சினை அடிப்படை பிரச்சினையாகவும் இதற்கான தீர்வு மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதேவேளை குறித்த கோரிக்கை கடிதத்தில் 500ற்கு மேற்பட்ட கிராம மக்களின் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளதுடன் குறித்த பிரச்சினை தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement