• May 13 2024

ஜி.எல்.பீரிஸ்கு பதிலாக புதிய தவிசாளர் நியமனம்...!அதிரடி காட்டும் மொட்டு...!samugammedia

Sharmi / Apr 22nd 2023, 12:30 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி பொதுகூட்டத்தின் போது பேராசிரியர் ஜீ.எல் பிரீசுக்கு பதிலாக பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(22) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.

இன்று பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.

அதன்படி இன்றைய பொதுக்குழு கூட்டம் கட்சியின் தவிசாளர் இல்லாமலேயே நடைபெற்றது. அதன்பின், கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் செயற்படுவார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு பதிலாக தோர்த்தவல தம்மரதன தேரர் கட்சியின் தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் ஏனைய பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எல்.பீரிஸ்கு பதிலாக புதிய தவிசாளர் நியமனம்.அதிரடி காட்டும் மொட்டு.samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி பொதுகூட்டத்தின் போது பேராசிரியர் ஜீ.எல் பிரீசுக்கு பதிலாக பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்று(22) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.இன்று பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.அதன்படி இன்றைய பொதுக்குழு கூட்டம் கட்சியின் தவிசாளர் இல்லாமலேயே நடைபெற்றது. அதன்பின், கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் செயற்படுவார்.ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு பதிலாக தோர்த்தவல தம்மரதன தேரர் கட்சியின் தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.கட்சியின் ஏனைய பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement