• May 19 2024

வடக்கு சுகாதார பணிப்பாளரின் நியமனம் தவறானது - தகவல் அறியும் சட்டம் மூலம் பதில் வழங்கவும் ஆளுநருக்கு கடிதம் samugammedia

Chithra / Apr 25th 2023, 5:57 pm
image

Advertisement

வட மாகாண சுகாதார பணிப்பாளராக வைத்தியர் திலீப் லியனகே தவறான நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பளம், உதவியாளர்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் பாலான இக் கோரிக்கையை ஏற்று பதில் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, 

வைத்தியர் திலீப் லியனகே அவர்களின் நியமனம் தொடர்பாக மாகாண நிர்வாகம் அவருக்கு வழங்கிய நியமனக்கடிதப் பிரதியை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் 17.01-20236 இல் கோரியிருந்தேன்.

"மத்திய சுகாதார அமைச்சின் இடமாற்ற முறைக்கு அமைவாகயே வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது" எனப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலை தவிர்ந்த  அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண நிர்வாகத்திற்குரியவை என்பது 3ம் திருத்த ஏற்படாகும்.

13ம் திருத்தம் என்பது நாட்டின் அரசியல் யாப்பின் ஓர் அங்கமாக் காணப்படும் நிலையில் ஜனாதிபதி முதல் பாமரர் வரை அரசியல் யாப்பிற்கு கட்டுப்பட்டவர்கள்.

மீறி செயற்படமுடியாது. 

அவ்வாறு மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் யாப்புக்கு விரோதமானதாக பார்க்கப்படும் நிலையில் கொழும்பு மத்திய சுகாதார அமைச்சின் இடமாற்றங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். 

அவ்வாறு இடமாற்றம் பெறுபவர்கள் மாகாண நிர்வாகத்திற்குள் வரமுடியாது. மாகாண நிர்வாகத்திற்கென தனியான சட்டங்களும் அதிகாரங்களும் உண்டு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட பதில் தவறானது.

வைத்தியர் லியனகே அவர்களுக்கு எந்த மாதத்திலிருந்து எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற விபரத்தையும், அவருக்கு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களையும், தனிப்பட்ட ரீதியிலிலான தேவை கருதி அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள சமையல்காரர், உதவியாளர்கள், சாரதி உட்பட வேலையாட்களின் விபரத்தையும் அவர்களுக்கான மாநாந்த கொடுப்பனவு விபரங்களையும் வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தின் அடிப்படையில் பதில் வழங்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.


வடக்கு சுகாதார பணிப்பாளரின் நியமனம் தவறானது - தகவல் அறியும் சட்டம் மூலம் பதில் வழங்கவும் ஆளுநருக்கு கடிதம் samugammedia வட மாகாண சுகாதார பணிப்பாளராக வைத்தியர் திலீப் லியனகே தவறான நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பளம், உதவியாளர்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் பாலான இக் கோரிக்கையை ஏற்று பதில் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, வைத்தியர் திலீப் லியனகே அவர்களின் நியமனம் தொடர்பாக மாகாண நிர்வாகம் அவருக்கு வழங்கிய நியமனக்கடிதப் பிரதியை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் 17.01-20236 இல் கோரியிருந்தேன்."மத்திய சுகாதார அமைச்சின் இடமாற்ற முறைக்கு அமைவாகயே வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது" எனப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.போதனா வைத்தியசாலை தவிர்ந்த  அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண நிர்வாகத்திற்குரியவை என்பது 3ம் திருத்த ஏற்படாகும்.13ம் திருத்தம் என்பது நாட்டின் அரசியல் யாப்பின் ஓர் அங்கமாக் காணப்படும் நிலையில் ஜனாதிபதி முதல் பாமரர் வரை அரசியல் யாப்பிற்கு கட்டுப்பட்டவர்கள்.மீறி செயற்படமுடியாது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் யாப்புக்கு விரோதமானதாக பார்க்கப்படும் நிலையில் கொழும்பு மத்திய சுகாதார அமைச்சின் இடமாற்றங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அவ்வாறு இடமாற்றம் பெறுபவர்கள் மாகாண நிர்வாகத்திற்குள் வரமுடியாது. மாகாண நிர்வாகத்திற்கென தனியான சட்டங்களும் அதிகாரங்களும் உண்டு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட பதில் தவறானது.வைத்தியர் லியனகே அவர்களுக்கு எந்த மாதத்திலிருந்து எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற விபரத்தையும், அவருக்கு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களையும், தனிப்பட்ட ரீதியிலிலான தேவை கருதி அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள சமையல்காரர், உதவியாளர்கள், சாரதி உட்பட வேலையாட்களின் விபரத்தையும் அவர்களுக்கான மாநாந்த கொடுப்பனவு விபரங்களையும் வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தின் அடிப்படையில் பதில் வழங்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement