• May 01 2024

கோட்டாபய ராஜபக்ஷவால் ஏமாற்றப்பட்ட பேராயர் மல்கம் ரஞ்சித்..!

Chithra / Apr 18th 2024, 9:41 am
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்தார்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை, எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவால் ஏமாற்றப்பட்ட பேராயர் மல்கம் ரஞ்சித்.  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்தார்.எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை, எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement