தம்புள்ளை - ஹம்பரணை வீதியில் ஔடங்காவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த இராணுவ வேன் ஒன்று அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது டிப்பரின் பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் மூன்று இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், இடது முன் இருக்கையில் அமர்ந்திருந்த அதிகாரி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.