• Mar 06 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் கைது - காரணம் வௌியானது

Chithra / Mar 6th 2025, 7:56 am
image


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் கைது - காரணம் வௌியானது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement