• Nov 25 2024

இரவோடு இரவாக வைத்தியர் அர்ச்சுனாவை கைதுசெய்ய முயற்சி; போராட்டத்தில் குதித்த மக்கள் – சாவகச்சேரி வைத்தியசாலை முன் ஏற்பட்ட பதற்றம்

Chithra / Jul 8th 2024, 7:42 am
image

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை நேற்றிரவு கைதுசெய்வதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளிற்கு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாவகச்சேரியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருமளவு பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் தனது முகப்புத்தகத்தில் காணொளியோன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளதாவது,  

நான் எனது தமிழ் மக்கள் சொல்லாமல் வைத்தியசாலையை விட்டு வெளியேற மாட்டேன்.

நான் 3 நாட்களாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் இருக்கிறேன .

பொலிஸாரும் இந்த விடயத்தினை முடிந்தளவு பிரச்சினையில்லாமல் தான் தீர்க்கப் பார்க்கிறார்கள்.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் இடமாற்ற கடிதத்தை என்னிடம் கொடுக்க முற்பட்டார்.  

அலுவலக நேரம் அல்ல என தெரிவித்து அதனை ஏற்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு மாகாண அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானமத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும்,

அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து நாளை காலை 8 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இரவோடு இரவாக வைத்தியர் அர்ச்சுனாவை கைதுசெய்ய முயற்சி; போராட்டத்தில் குதித்த மக்கள் – சாவகச்சேரி வைத்தியசாலை முன் ஏற்பட்ட பதற்றம்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை நேற்றிரவு கைதுசெய்வதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளிற்கு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாவகச்சேரியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.வைத்தியர் அர்ச்சுனாவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெருமளவு பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் தனது முகப்புத்தகத்தில் காணொளியோன்றினை வெளியிட்டுள்ளார்.அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளதாவது,  நான் எனது தமிழ் மக்கள் சொல்லாமல் வைத்தியசாலையை விட்டு வெளியேற மாட்டேன்.நான் 3 நாட்களாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் இருக்கிறேன .பொலிஸாரும் இந்த விடயத்தினை முடிந்தளவு பிரச்சினையில்லாமல் தான் தீர்க்கப் பார்க்கிறார்கள்.வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் இடமாற்ற கடிதத்தை என்னிடம் கொடுக்க முற்பட்டார்.  அலுவலக நேரம் அல்ல என தெரிவித்து அதனை ஏற்கவில்லை என பதிவிட்டுள்ளார்.இதேவேளை வடக்கு மாகாண அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானமத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும்,அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து நாளை காலை 8 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement