• May 18 2024

சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி...!முக்கிய அமைச்சரின் ஆதரவாளர்கள் சிக்கினர்..!samugammedia

Sharmi / Jul 17th 2023, 1:32 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் மீது இன்று காலை மட்டக்களப்பில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் மன்னம்பிட்டிய  பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஆகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நான் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த இரு அரச சார் அமைச்சரின் ஆட்கள் என்னை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களாளும் குழுமியிருந்த மக்களாலும்  வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எனக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் என் மக்களுக்கு எனது நன்றிகள் என அவர் தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி.முக்கிய அமைச்சரின் ஆதரவாளர்கள் சிக்கினர்.samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் மீது இன்று காலை மட்டக்களப்பில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,அண்மையில் மன்னம்பிட்டிய  பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.ஆகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நான் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த இரு அரச சார் அமைச்சரின் ஆட்கள் என்னை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களாளும் குழுமியிருந்த மக்களாலும்  வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எனக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் என் மக்களுக்கு எனது நன்றிகள் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement