• May 19 2024

ஜனாதிபதி செயலகத்தில் சதி முயற்சி: முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் - சஜித் காட்டம்!

Sharmi / Jan 11th 2023, 12:02 pm
image

Advertisement

ஜனாதிபதி செயலகத்திலுள்ள சில ஆலோசகர்கள், மற்றும் அதிகாரிகள் இணைந்து தேர்தல் இடம்பெறுவதை தடுப்பதற்கான சதிகளை மேற்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமெனவும் மக்களின் இறையாண்மை உரிமையை சீர்குலைக்க அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பாக சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் வியப்பளிப்பதில்லை என்றும் கடந்த காலங்களில் சில நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார் .

ஜனாதிபதி செயலகத்தின் சில ஆலோசகர்கள், அதிகாரிகள் இணைந்து  தேர்தல் இடம்பெறுவதை தடுப்பதற்காக சதிகளை கையாண்டதாகவும் இதன் பெறுபேறே தற்போது வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் சதி முயற்சி: முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் - சஜித் காட்டம் ஜனாதிபதி செயலகத்திலுள்ள சில ஆலோசகர்கள், மற்றும் அதிகாரிகள் இணைந்து தேர்தல் இடம்பெறுவதை தடுப்பதற்கான சதிகளை மேற்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமெனவும் மக்களின் இறையாண்மை உரிமையை சீர்குலைக்க அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பாக சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் வியப்பளிப்பதில்லை என்றும் கடந்த காலங்களில் சில நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார் .ஜனாதிபதி செயலகத்தின் சில ஆலோசகர்கள், அதிகாரிகள் இணைந்து  தேர்தல் இடம்பெறுவதை தடுப்பதற்காக சதிகளை கையாண்டதாகவும் இதன் பெறுபேறே தற்போது வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement