• May 02 2024

உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் - காத்திருக்கும் ஆபத்து!

Tamil nila / Feb 9th 2023, 6:26 pm
image

Advertisement

உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இவை அவ்வளவு எளிதாக அறிகுறிகளை வெளியில் காட்டிவிடாது.


 இருப்பினும் உடலின் மற்ற பாகங்களான கால்கள் அல்லது நகங்கள் போன்றவை சில சமயங்களில் சில அறிகுறிகளைக் வெளிப்படுத்தும். 



இதனை கவனித்து தக்க சமயத்தில் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.  கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.  


உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் நமது உடலில் என்னென்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை காண்போம்.


அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும்.  இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும். 


உங்கள் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவுகள் படிந்து அடைப்பு ஏற்பட்டு எம்போலைசேஷன் சிண்ட்ரோம் ஏற்படும், இதனால் குளிர்காலத்தில் தோலில் நீலம் அல்லது ஊதா நிற வலை போன்ற வடிவங்கள் தோன்றலாம். 


இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதால் மூலம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வெளிறிய நகங்கள் ஏற்படும்.


 மூக்கிற்கு அடுத்ததாக கண் இமைகளின் மூலைகளில் மஞ்சள் நிறத்தில் வளர்ச்சி ஏற்படும், இதற்கு சாந்தெலஸ்மா என்று பெயர்.  இது வந்துவிட்டாலே உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாகிவிட்டது என்று அர்த்தமாகும், இது ஆபத்தானது இல்லை என்றாலும் இதனால் எதிர்காலத்தில் இதயப் பிரச்சனைகள் ஏற்படும்.


உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் - காத்திருக்கும் ஆபத்து உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இவை அவ்வளவு எளிதாக அறிகுறிகளை வெளியில் காட்டிவிடாது. இருப்பினும் உடலின் மற்ற பாகங்களான கால்கள் அல்லது நகங்கள் போன்றவை சில சமயங்களில் சில அறிகுறிகளைக் வெளிப்படுத்தும். இதனை கவனித்து தக்க சமயத்தில் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.  கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.  உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் நமது உடலில் என்னென்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை காண்போம்.அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும்.  இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும். உங்கள் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவுகள் படிந்து அடைப்பு ஏற்பட்டு எம்போலைசேஷன் சிண்ட்ரோம் ஏற்படும், இதனால் குளிர்காலத்தில் தோலில் நீலம் அல்லது ஊதா நிற வலை போன்ற வடிவங்கள் தோன்றலாம். இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதால் மூலம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வெளிறிய நகங்கள் ஏற்படும். மூக்கிற்கு அடுத்ததாக கண் இமைகளின் மூலைகளில் மஞ்சள் நிறத்தில் வளர்ச்சி ஏற்படும், இதற்கு சாந்தெலஸ்மா என்று பெயர்.  இது வந்துவிட்டாலே உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாகிவிட்டது என்று அர்த்தமாகும், இது ஆபத்தானது இல்லை என்றாலும் இதனால் எதிர்காலத்தில் இதயப் பிரச்சனைகள் ஏற்படும்.

Advertisement

Advertisement

Advertisement