• Apr 27 2024

மக்களே அவதானம்...! யாழ்-கொழும்பு பேருந்தில் கைவரிசை காட்டும் மர்ம கும்பல்...! samugammedia

Sharmi / Nov 14th 2023, 4:12 pm
image

Advertisement

யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம் சொகுசுப் பேருந்தில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2ம் திகதி யாழ் பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பிரபல சொகுசு பேருந்து  புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள்  2 ஆண்களுமாக 6 பேர்  குறித்த பேருந்தில் பயணிகள் போர்வையில் ஏறியுள்ளனர்.

இதேவேளை குறித்த பேருந்தில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பமொன்று கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க ஆயத்தமான வேளை புத்தளம் பகுதியில் பயணிகள் போர்வையில்  குறித்த பேருந்தில் ஏறிய கும்பலைச் சேர்ந்த பெண்  ஒருவர் பேரூந்தில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய பமராவினை தனது கைப் பையினால் மறைக்கும் போது  அவருடன் கூடவந்த மற்றைய பெண் யாழைச் சேர்ந்த குடும்ப பெண்ணின் கைப்பையினுள் இருந்த  1 லட்சம் ரூபாய் பணத்தினை தந்திரமான முறையில் திருடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக்கொண்டதாக  பேருந்தின்  சாரதி மற்றும் நடத்துநர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழைச் சேர்ந்த பெண்ணின் கைப் பையினுள் இருந்து பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை குறித்த யாழ் குடும்பத்தினருக்கு பேருந்து நடத்துநர் பணம் திருடப்படுவதற்கு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேருந்தில் பயணித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேருந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள்  மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண் என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
















மக்களே அவதானம். யாழ்-கொழும்பு பேருந்தில் கைவரிசை காட்டும் மர்ம கும்பல். samugammedia யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.இவ்வாறான நிலையில் யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம் சொகுசுப் பேருந்தில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 2ம் திகதி யாழ் பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பிரபல சொகுசு பேருந்து  புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள்  2 ஆண்களுமாக 6 பேர்  குறித்த பேருந்தில் பயணிகள் போர்வையில் ஏறியுள்ளனர்.இதேவேளை குறித்த பேருந்தில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பமொன்று கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க ஆயத்தமான வேளை புத்தளம் பகுதியில் பயணிகள் போர்வையில்  குறித்த பேருந்தில் ஏறிய கும்பலைச் சேர்ந்த பெண்  ஒருவர் பேரூந்தில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய பமராவினை தனது கைப் பையினால் மறைக்கும் போது  அவருடன் கூடவந்த மற்றைய பெண் யாழைச் சேர்ந்த குடும்ப பெண்ணின் கைப்பையினுள் இருந்த  1 லட்சம் ரூபாய் பணத்தினை தந்திரமான முறையில் திருடியுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக்கொண்டதாக  பேருந்தின்  சாரதி மற்றும் நடத்துநர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை யாழைச் சேர்ந்த பெண்ணின் கைப் பையினுள் இருந்து பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.இதேவேளை குறித்த யாழ் குடும்பத்தினருக்கு பேருந்து நடத்துநர் பணம் திருடப்படுவதற்கு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேருந்தில் பயணித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேருந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்ததுஇதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள்  மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண் என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement