• Sep 08 2024

திடீர் கனமழையால் திணறும் ஆஸ்திரேலியா...! வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்..!

Sharmi / Jun 8th 2024, 12:08 pm
image

Advertisement

கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பல தாழ்வான புறநகர் பகுதிகளில் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 13 பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவைகள் பிரிவினரால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில், 

நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளில் பத்து அவசரகால வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி நகரின் வடமேற்கில் பாரிய  வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


திடீர் கனமழையால் திணறும் ஆஸ்திரேலியா. வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள். கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக பல தாழ்வான புறநகர் பகுதிகளில் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 13 பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவைகள் பிரிவினரால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில், நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளில் பத்து அவசரகால வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை, சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி நகரின் வடமேற்கில் பாரிய  வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement