இயர்போன்களால் வரும் அவஸ்தைகள்! மக்களே உஷார்

இயர்போன்கள் என்பது தற்போது பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.

தற்போதுஇ இயர்பாட்ஸ் எனப்படும் காதுகளில் வைத்து பயன்படுத்தப்படும் பட்டன் அளவில் இருக்கும் ஹெட்போன்களும் கிடைக்கின்றன.

இசை பிரியர்கள் ஹெட்போன்களை தங்களது உடலில் ஒரு பாகமாகவே கருதுகின்றனர். சிலர் தங்கள் கழுத்தை சுற்றி அந்த ஹெட்போன்கள் கிடப்பதை மிகவும் விரும்புகின்றனர்.

இந்த ஹெட்போன்களால் நாம் சில அசௌகரியங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது.

இந்த ஹெட்போன்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு தான், காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடைவது.

2வது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. நமது காதுகள் 40 டெசிபல் அதிர்வுகளை மட்டுமே தாங்கும். அதனை தாண்டும் போது, காதுகள் மெல்ல செவிட்டுத் தன்மையை அடையும்.

தினமும் இயர் போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும்.

சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. செவித்திறன் பாதிப்பு மட்டுமல்லாமல், அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் காது விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பயன்படுத்தும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள், பயன்படுத்தும் போது, சத்தத்தை குறைத்து வைப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை