• May 18 2024

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வு - யாழில் நடைபவனி! SamugamMedia

Chithra / Mar 11th 2023, 1:34 pm
image

Advertisement

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனியொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ் பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அதிபர் துசிதரன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறீதரன்,பெண்களுக்கான புற்றுநோய்  சத்திரசிகிச்சை நிபுணர் தனுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடைபவனியானது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வீதி ஊடாக  செல்லவுள்ளது.


புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வு - யாழில் நடைபவனி SamugamMedia புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனியொன்று இடம்பெறவுள்ளது.எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ் பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அதிபர் துசிதரன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறீதரன்,பெண்களுக்கான புற்றுநோய்  சத்திரசிகிச்சை நிபுணர் தனுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நடைபவனியானது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வீதி ஊடாக  செல்லவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement