• May 08 2024

பதுளை விபத்து - மேலும் இரு மாணவர்கள் கவலைக்கிடம்! samugammedia

Tamil nila / Apr 1st 2023, 6:40 pm
image

Advertisement

பதுளையில் பாடசாலை கிரிக்கட் போட்டிக்காக இடம்பெற்ற வாகன பேரணியின் போது ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் இன்று (01) உயிரிழந்துள்ளனர்.


விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.


பதுளையில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலை கிரிக்கட் சுற்றுப்போட்டி இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது.


போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட வாகன பேரணியில் பயணித்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


பதுளை புதிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பதுளை தர்மதுத கல்லூரியில் 13ம் தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த துரதிஷ்டவசமான விபத்தில் ரவிது துலக்ஷன ஜயதிலக மற்றும் ஹரீந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை விபத்து - மேலும் இரு மாணவர்கள் கவலைக்கிடம் samugammedia பதுளையில் பாடசாலை கிரிக்கட் போட்டிக்காக இடம்பெற்ற வாகன பேரணியின் போது ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் இன்று (01) உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.பதுளையில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலை கிரிக்கட் சுற்றுப்போட்டி இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது.போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட வாகன பேரணியில் பயணித்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பதுளை புதிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை தர்மதுத கல்லூரியில் 13ம் தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த துரதிஷ்டவசமான விபத்தில் ரவிது துலக்ஷன ஜயதிலக மற்றும் ஹரீந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement