• Jul 05 2025

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்குத் தடை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Chithra / Jul 3rd 2025, 2:52 pm
image


உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சந்தையில் காணப்படும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. 

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, 

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

சுடுநீரை பொருத்தமற்ற பிளாஸ்டிக் போத்தல்களுக்கு ஊற்றுகிறார்கள். இந்தப் பொருட்களின் உற்பத்தி குறித்து உலகம் விழிப்புடன் இருந்து வருகிறது, அவற்றில் உள்ள புற்றுநோய் காரணிகள் குறித்து அவதானத்தை செலுத்தியுள்ளது. 

சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடுமையான, ஆபத்தான நிலைமைகள் பதிவாகியுள்ளன. 

இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களுக்கு இது தொடர்பான உண்மைகளை விளக்குவோம். நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்கப்படும். என தெரிவித்தார். 

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்குத் தடை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.சந்தையில் காணப்படும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். சுடுநீரை பொருத்தமற்ற பிளாஸ்டிக் போத்தல்களுக்கு ஊற்றுகிறார்கள். இந்தப் பொருட்களின் உற்பத்தி குறித்து உலகம் விழிப்புடன் இருந்து வருகிறது, அவற்றில் உள்ள புற்றுநோய் காரணிகள் குறித்து அவதானத்தை செலுத்தியுள்ளது. சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடுமையான, ஆபத்தான நிலைமைகள் பதிவாகியுள்ளன. இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களுக்கு இது தொடர்பான உண்மைகளை விளக்குவோம். நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்கப்படும். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement