• May 18 2024

மட்டக்களப்பில் நல்லிணக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 12:51 pm
image

Advertisement

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து முன்னெடுக்கவுள்ள நிலையான சமாதானத்திற்கான  நல்லிணக்க கதிர்காம பாத யாத்திரை தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.


இக் கலந்துரையாடலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சரத்சந்திரபால, நிருவாக உத்தியோகத்தர் தியாகராஜா, அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிகுமார், சுபாகரன், மற்றும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் பிரதேச மாவட்ட சம்மேளனங்களின் முக்கிய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



எதிர்வரும் 12.06.2023ம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந் நல்லிணக்கப் பாதயாத்திரையானது எதிர்வரும் 19.06.2023ம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இப்பாதயாத்திரையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மட்டக்களப்பில் நல்லிணக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் samugammedia இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து முன்னெடுக்கவுள்ள நிலையான சமாதானத்திற்கான  நல்லிணக்க கதிர்காம பாத யாத்திரை தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சரத்சந்திரபால, நிருவாக உத்தியோகத்தர் தியாகராஜா, அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிகுமார், சுபாகரன், மற்றும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் பிரதேச மாவட்ட சம்மேளனங்களின் முக்கிய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.எதிர்வரும் 12.06.2023ம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந் நல்லிணக்கப் பாதயாத்திரையானது எதிர்வரும் 19.06.2023ம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இப்பாதயாத்திரையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement