கரடியொன்று திடீரென தனது பராமரிப்பாளரை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சீனாவின் ஹாங்ஷோவில் உள்ள ஷஃபாரி உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த உயிரியல் பூங்காவில், விலங்குகளை அழைத்து வந்து பராமரிப்பாளர் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கரடி பராமரிப்பாளரைத் தாக்கியது.
கரடி தனது பராமரிப்பாளரின் உடையை வலுவாக கவ்விக்கொண்டதால், அதனிடம் இருந்து அவரை மீட்பதற்கு சக ஊழியர்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் உணவுப் பொருட்களின் வாசனை கரடியின் உணவு இயக்கத்தைத் தூண்டியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பராமரிப்பாளரை கரடி தாக்கும் வீடியோ வெளியாகி, உயிரியல் பூங்காங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
உணவு கொடுக்க சென்ற பராமரிப்பாளர் மேல் பாய்ந்த கரடி கரடியொன்று திடீரென தனது பராமரிப்பாளரை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் சீனாவின் ஹாங்ஷோவில் உள்ள ஷஃபாரி உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில், விலங்குகளை அழைத்து வந்து பராமரிப்பாளர் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கரடி பராமரிப்பாளரைத் தாக்கியது. கரடி தனது பராமரிப்பாளரின் உடையை வலுவாக கவ்விக்கொண்டதால், அதனிடம் இருந்து அவரை மீட்பதற்கு சக ஊழியர்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.மேலும் உணவுப் பொருட்களின் வாசனை கரடியின் உணவு இயக்கத்தைத் தூண்டியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பராமரிப்பாளரை கரடி தாக்கும் வீடியோ வெளியாகி, உயிரியல் பூங்காங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.