• May 18 2024

பந்தயம் – சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அங்கீகாரம் - விரைவில் வர்த்தமானி! SamugamMedia

Chithra / Mar 21st 2023, 5:27 pm
image

Advertisement


திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.

1988ஆம் ஆண்டு 40ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு கடந்த ஜூலை 4ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன் பிரகாரம் வரைவினால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பந்தயம் – சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அங்கீகாரம் - விரைவில் வர்த்தமானி SamugamMedia திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.1988ஆம் ஆண்டு 40ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு கடந்த ஜூலை 4ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.அதன் பிரகாரம் வரைவினால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement