• Jan 16 2025

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 4 அகதிகளின் சடலம்: விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார்! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 9:51 pm
image

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் ஸ்பெயின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மொரோக்கோவில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.

இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் 4 பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்பெயின் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி,

ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர் ஸ்பெயின் நிலப்பரப்பு அல்லது பலேரிக் தீவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 4 அகதிகளின் சடலம்: விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் samugammedia வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் ஸ்பெயின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி, மொரோக்கோவில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் 4 பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்பெயின் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி,ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர் ஸ்பெயின் நிலப்பரப்பு அல்லது பலேரிக் தீவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement