• Feb 05 2025

கொழும்பில் பொது மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள கட்டிடம்! - நீதிமன்றத்தின் உத்தரவு

Chithra / Dec 6th 2024, 12:14 pm
image

 

கொழும்பு - கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டடமான கிரிஷ் (KRISH) கட்டிடம் (The One Transworks)  இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பணிப்பாளர் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிபந்தனையுடன் கூடிய உத்தரவு பிறப்பித்த நீதவான், கட்டிடம் எந்த ஒரு பொருளும் இடிந்து விழும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 

கீழே விழுந்து, விழக்கூடிய அழுகும் பொருட்கள் இருந்தால், அந்த பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.

55 நாட்களுக்குள் அவற்றினை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பொது மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள கட்டிடம் - நீதிமன்றத்தின் உத்தரவு  கொழும்பு - கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டடமான கிரிஷ் (KRISH) கட்டிடம் (The One Transworks)  இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பணிப்பாளர் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.நிபந்தனையுடன் கூடிய உத்தரவு பிறப்பித்த நீதவான், கட்டிடம் எந்த ஒரு பொருளும் இடிந்து விழும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், கீழே விழுந்து, விழக்கூடிய அழுகும் பொருட்கள் இருந்தால், அந்த பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.55 நாட்களுக்குள் அவற்றினை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement