எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த சிட்னி டெஸ்ட் போட்டியின்போது உபாதைக்கு உள்ளான பும்ரா அதில் இருந்து மீளாத நிலையிலேயே சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்கவில்லை.
அவருக்கு பதில் வருன் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எட்டு அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா தனது போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆடவுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து விலகினார் பும்ரா எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த சிட்னி டெஸ்ட் போட்டியின்போது உபாதைக்கு உள்ளான பும்ரா அதில் இருந்து மீளாத நிலையிலேயே சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்கவில்லை.அவருக்கு பதில் வருன் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.எட்டு அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா தனது போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆடவுள்ளது.