• May 18 2024

கொழும்பில் இன்று முதல் பேருந்து பாதை விதிகள் கடுமையாக அமுலுக்கு வந்துள்ளன...!samugammedia

Anaath / Nov 1st 2023, 12:58 pm
image

Advertisement

பேருந்து முன்னுரிமைப் பாதை திட்டத்தினை இன்று (01) முதல் முன்னோடி திட்டமாக மீண்டும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகமே  இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதன்படி, வெள்ளவத்தை - சவோய் சினிமாவுக்கு அருகாமையில் இருந்து காலி வீதி ஊடாக புறக்கோட்டை வரை குறித்த பேருந்து முன்னுரிமைப் பாதை வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அது தொடர்பான விபரம் வருமாறு,

காலை 06 மணி முதல் 09 மணி வரை இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மருதானை வீதி, பொரளை சந்தி, புறக்கோட்டை - ஒல்கொட் மாவத்தை வழியாக வாகனங்கள் காலை 06 மணி முதல் 09 மணி வரை கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை வேன்கள் மற்றும் பேருந்துகள், பணியாளர்கள் போக்குவரத்து பேருந்துகள் குறித்த காலப்பகுதியில் அந்தந்த பாதையில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்கள் இந்த பாதையில் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று முதல் பேருந்து பாதை விதிகள் கடுமையாக அமுலுக்கு வந்துள்ளன.samugammedia பேருந்து முன்னுரிமைப் பாதை திட்டத்தினை இன்று (01) முதல் முன்னோடி திட்டமாக மீண்டும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகமே  இவ்வாறு தெரிவித்துள்ளது.இதன்படி, வெள்ளவத்தை - சவோய் சினிமாவுக்கு அருகாமையில் இருந்து காலி வீதி ஊடாக புறக்கோட்டை வரை குறித்த பேருந்து முன்னுரிமைப் பாதை வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.அது தொடர்பான விபரம் வருமாறு,காலை 06 மணி முதல் 09 மணி வரை இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மருதானை வீதி, பொரளை சந்தி, புறக்கோட்டை - ஒல்கொட் மாவத்தை வழியாக வாகனங்கள் காலை 06 மணி முதல் 09 மணி வரை கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை வேன்கள் மற்றும் பேருந்துகள், பணியாளர்கள் போக்குவரத்து பேருந்துகள் குறித்த காலப்பகுதியில் அந்தந்த பாதையில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய வாகனங்கள் இந்த பாதையில் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement