• Sep 17 2024

ஆப்பிள் சிடார் வினிகர் உண்மையில் எடையை குறைக்குமா?

Chithra / Dec 17th 2022, 6:14 pm
image

Advertisement

ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், தொப்பையை குறைப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் கரையச் செய்கிறது.

நாம் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் ஆப்பிள் சிடார் வினிகரின் அளவு ஒரு கலோரிக்குள் இருப்பதனால் இது நிச்சயம் உங்களுடைய எடை குறைப்பு டயட்டில் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து கொள்வது நல்லது. 


ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உங்களை அதிக நேரம் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு சாப்பிட்ட உணவிலும் வயிறு நிரம்பிள திருப்தியை ஏற்படுத்துவதால் நீண்ட நேரம் பசிக்காது. இதனால் அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரி அளவுகளும் குறையும். இவை அனைத்துமே எடை இழப்புக்கும் உதவி புரியும்.

எடையையும் குறைய வேண்டும், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிள் சிடார் வினிகரை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?


ஆப்பிள் சிடார் வினிகரை அப்படியே குடிக்க கூடாது. குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

சாலட் போன்றவற்றில் ஆலிவ் ஆயிலை டிரெஸ்ஸிங்காக பயன்படுத்துவது போல அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு பதிலாக இந்த ஆப்பிள் சிடார் வினிகரை சேர்க்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆப்பிள் சிடார் வினிகர் எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு வேளை உணவுக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வரலாம். 

பக்க விளைவு உண்டா?


அதிகமாக ஆப்பிள் சிடார் வினிகர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 

அதில் அமிலத் தன்மை அதிகமாக இருப்பதால் எப்படி நேரடியாகக் குடிக்கக் கூடாதோ அதேபோல நீரில் கலந்து குடித்தாலும் அளவோடு குடிப்பது நல்லது. 

அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்சு எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் ஆகியவை உண்டாகலாம்.

ஆப்பிள் சிடார் வினிகர் உண்மையில் எடையை குறைக்குமா ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், தொப்பையை குறைப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் கரையச் செய்கிறது.நாம் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் ஆப்பிள் சிடார் வினிகரின் அளவு ஒரு கலோரிக்குள் இருப்பதனால் இது நிச்சயம் உங்களுடைய எடை குறைப்பு டயட்டில் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து கொள்வது நல்லது. ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உங்களை அதிக நேரம் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு சாப்பிட்ட உணவிலும் வயிறு நிரம்பிள திருப்தியை ஏற்படுத்துவதால் நீண்ட நேரம் பசிக்காது. இதனால் அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரி அளவுகளும் குறையும். இவை அனைத்துமே எடை இழப்புக்கும் உதவி புரியும்.எடையையும் குறைய வேண்டும், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிள் சிடார் வினிகரை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்ஆப்பிள் சிடார் வினிகரை அப்படியே குடிக்க கூடாது. குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.சாலட் போன்றவற்றில் ஆலிவ் ஆயிலை டிரெஸ்ஸிங்காக பயன்படுத்துவது போல அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு பதிலாக இந்த ஆப்பிள் சிடார் வினிகரை சேர்க்கலாம்.ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆப்பிள் சிடார் வினிகர் எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு வேளை உணவுக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வரலாம். பக்க விளைவு உண்டாஅதிகமாக ஆப்பிள் சிடார் வினிகர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதில் அமிலத் தன்மை அதிகமாக இருப்பதால் எப்படி நேரடியாகக் குடிக்கக் கூடாதோ அதேபோல நீரில் கலந்து குடித்தாலும் அளவோடு குடிப்பது நல்லது. அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்சு எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் ஆகியவை உண்டாகலாம்.

Advertisement

Advertisement

Advertisement