• May 13 2024

வடமராட்சிக் கடலில் கரையொதுங்கிய மர்ம கப்பலால் பரபரப்பு!

Sharmi / Dec 17th 2022, 6:36 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் இன்று மாலை 140 பேருடன் பயணித்த மியன்மார் நாட்டவரது படகொன்று விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் தத்தளித்தனர்.

இந்நிலையில் குறித்த படகை கண்ணுற்ற இலங்கை மீனவர்கள் உடனடியாக கடற்படைக்கு அறிவித்ததையடுத்து கடற்படை இரு படகுகளில் சென்று குறித்த படகின் நிலை தொடர்பில் ஆராய்ந்ததோடு படகில் இருந்தோருடன் கலந்துரையாடி மீண்டும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முன்னைய இணைப்பு

வடமராட்சி மருதங்கேணி  கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

குறித்த கப்பலானது வேறொரு நாட்டிற்கு சொந்தமானது எனவும் கப்பலானது உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த கப்பலை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த கப்பலில் உள்ள பயணிகளின் நிலை தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

 மேலதிக செய்திகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்....

வடமராட்சிக் கடலில் கரையொதுங்கிய மர்ம கப்பலால் பரபரப்பு யாழ்ப்பாணம் மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் இன்று மாலை 140 பேருடன் பயணித்த மியன்மார் நாட்டவரது படகொன்று விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் தத்தளித்தனர்.இந்நிலையில் குறித்த படகை கண்ணுற்ற இலங்கை மீனவர்கள் உடனடியாக கடற்படைக்கு அறிவித்ததையடுத்து கடற்படை இரு படகுகளில் சென்று குறித்த படகின் நிலை தொடர்பில் ஆராய்ந்ததோடு படகில் இருந்தோருடன் கலந்துரையாடி மீண்டும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.முன்னைய இணைப்புவடமராட்சி மருதங்கேணி  கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.குறித்த கப்பலானது வேறொரு நாட்டிற்கு சொந்தமானது எனவும் கப்பலானது உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த கப்பலை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த கப்பலில் உள்ள பயணிகளின் நிலை தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக செய்திகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

Advertisement

Advertisement

Advertisement