14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் திருமண நிகழ்வுகளை நடத்தலாமா? வெளியானது அறிவிப்பு..!

156

எதிர்வரும் 14ம் திகதி முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன், எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி முதல் எவ்வாறான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது என்பது குறித்து இன்றைய தினம் (11) இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறிப்பாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை மதுபானசாலைகளை தொடர்ந்தும் திறக்காதிருப்பதற்கு தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு இந்த தீர்மானங்கள் குறித்து இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்ட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: