• Dec 06 2024

தொடருந்து கடவையில் சிக்குண்டு விபத்துக்குள்ளான கார்! நால்வர் படுகாயம்

Chithra / Dec 4th 2024, 7:29 am
image

 

காலியில் தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, நேற்று (03) இரவு ஏற்பட்டுள்ளது. 

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று தொடருந்துடன் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி - சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடருந்து கடவையில் சிக்குண்டு விபத்துக்குள்ளான கார் நால்வர் படுகாயம்  காலியில் தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்தானது, நேற்று (03) இரவு ஏற்பட்டுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று தொடருந்துடன் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காலி - சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதேவேளை, காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement