எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கடந்த புதன்கிழமை (12) இரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பழுதடைந்த மற்றும் களஞ்சியப்படுத்திய உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒன்பது கடை உரிமையாளர்களுக்கும் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறையில் தீடீர் சோதனை - ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கடந்த புதன்கிழமை (12) இரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பழுதடைந்த மற்றும் களஞ்சியப்படுத்திய உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒன்பது கடை உரிமையாளர்களுக்கும் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.