ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்த வீல் லோடர் சாரதி ஒருவர் சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் லுனுகம்வெஹரவின் தென் கரையில் உள்ள ஜனுதான கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் சீமெந்து தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வீல் லோடர் மூலம் லொறிகளில் ஏற்றிக்கொண்டிருந்தபோது, மூலப்பொருட்கள் வீல் லோடர் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற போது அருகில் இருந்த லொறி சாரதிகள் காயமடைந்த நபரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து ஒருவர் சாரதி மரணம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்த வீல் லோடர் சாரதி ஒருவர் சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் லுனுகம்வெஹரவின் தென் கரையில் உள்ள ஜனுதான கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் சீமெந்து தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வீல் லோடர் மூலம் லொறிகளில் ஏற்றிக்கொண்டிருந்தபோது, மூலப்பொருட்கள் வீல் லோடர் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து இடம்பெற்ற போது அருகில் இருந்த லொறி சாரதிகள் காயமடைந்த நபரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.விபத்து தொடர்பான விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்