• Apr 08 2025

விமானத்தில் நித்திரையான இலங்கையருக்கு அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் சிக்கிய சீன பிரஜைகள்

Chithra / Apr 7th 2025, 8:00 pm
image


தாய்லாந்திருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் முதியவர் ஒருவரின் பையிலிருந்து பணத்தைத் திருடிய இரண்டு  சீன பிரஜைகள்  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று  காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 71 வயதுடைய முதியவர் ஒருவரின்  பையிலிருந்தே  பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த முதியவர் ராகம பிரதேசத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காகத் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது அதே விமானத்தில் பயணித்த சீன பிரஜைகள் இருவர், முதியவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது பையிலிருந்து 60,000 ரூபா இலங்கை பணம் மற்றும் 2 ஆயிரம் டொலரை திருடியுள்ளனர். 

தனது பையிலிருந்த பணம் திருடப்பட்டதை அறிந்துகொண்ட முதியவர் இது தொடர்பில் உடனடியாக விமானத்திலிருந்த பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதையடுத்து, விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சீன பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

36 மற்றும் 39 வயதுடைய சீன பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானத்தில் நித்திரையான இலங்கையருக்கு அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் சிக்கிய சீன பிரஜைகள் தாய்லாந்திருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் முதியவர் ஒருவரின் பையிலிருந்து பணத்தைத் திருடிய இரண்டு  சீன பிரஜைகள்  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று  காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 71 வயதுடைய முதியவர் ஒருவரின்  பையிலிருந்தே  பணம் திருடப்பட்டுள்ளது.இந்த முதியவர் ராகம பிரதேசத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காகத் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளார்.இதன்போது அதே விமானத்தில் பயணித்த சீன பிரஜைகள் இருவர், முதியவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது பையிலிருந்து 60,000 ரூபா இலங்கை பணம் மற்றும் 2 ஆயிரம் டொலரை திருடியுள்ளனர். தனது பையிலிருந்த பணம் திருடப்பட்டதை அறிந்துகொண்ட முதியவர் இது தொடர்பில் உடனடியாக விமானத்திலிருந்த பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதையடுத்து, விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சீன பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 மற்றும் 39 வயதுடைய சீன பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement