• May 18 2024

வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய மத்திய வங்கி - IMF பாராட்டு! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 2:26 pm
image

Advertisement

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி நேற்று (03) அறிவித்துள்ளது.

கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது மற்றும் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளதாக இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய மத்திய வங்கி - IMF பாராட்டு SamugamMedia பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி நேற்று (03) அறிவித்துள்ளது.கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது மற்றும் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளதாக இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement