மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் .
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஹட்டன்-திம்புலபதன பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததிலே இவ்வாறு மூவர் காயமடைந்துள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பி.ப.2.00 மணிக்குப் பின் வானிலையில் மாற்றம்; மக்களுக்கு எச்சரிக்கை மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் . இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில் ஹட்டன்-திம்புலபதன பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.குறித்த பகுதியில் ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததிலே இவ்வாறு மூவர் காயமடைந்துள்ளனர்.முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதனால், சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.