• Nov 17 2024

வங்கி வட்டியில் ஏற்பட்ட மாற்றம்: கடும் நெருக்கடியில் மூத்த குடிமக்கள்..!

Chithra / Feb 25th 2024, 2:36 pm
image

 

நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

வங்கி வட்டி விகிதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகள் பரிவர்த்தனைகளில் 3 சதவீதம் எடுத்துக் கொள்வதாலும் இவ்வாறு மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கிடைக்கும் வருமானத்தை வங்கிகளில் வைப்பு செய்து, வட்டியில் தான் வாழ்கின்றனர்.

ஆனால் இன்று வங்கிகளில் வட்டி கொடுக்கும் முறையால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகளால் ஏராளமான குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளது.

இந்த முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

வங்கி வட்டியில் ஏற்பட்ட மாற்றம்: கடும் நெருக்கடியில் மூத்த குடிமக்கள்.  நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.வங்கி வட்டி விகிதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகள் பரிவர்த்தனைகளில் 3 சதவீதம் எடுத்துக் கொள்வதாலும் இவ்வாறு மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கிடைக்கும் வருமானத்தை வங்கிகளில் வைப்பு செய்து, வட்டியில் தான் வாழ்கின்றனர்.ஆனால் இன்று வங்கிகளில் வட்டி கொடுக்கும் முறையால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகளால் ஏராளமான குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளது.இந்த முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement