• Nov 19 2024

நுகர்வோர் விவகார அதிகாரசபையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Tamil nila / Nov 17th 2024, 7:50 pm
image

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சட்டத்திற்கு முரணான வகையில் விசாரணைப் பிரிவின் தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பிரிவு கலைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின்றியே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நியமனம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கேட்டபோது, ​​அவ்வாறான நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நியமிக்கப்பட்ட ஊடக அதிகாரியும் தற்போதைய தலைவரால் நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வர்த்தக அமைச்சர் தன்னிச்சையாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறித்த நியமனம் தொடர்பில் தற்போதைய தலைவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சட்டத்திற்கு முரணான வகையில் விசாரணைப் பிரிவின் தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பிரிவு கலைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின்றியே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.குறித்த நியமனம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கேட்டபோது, ​​அவ்வாறான நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நியமிக்கப்பட்ட ஊடக அதிகாரியும் தற்போதைய தலைவரால் நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் வர்த்தக அமைச்சர் தன்னிச்சையாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.குறித்த நியமனம் தொடர்பில் தற்போதைய தலைவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement