• May 18 2024

சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை - வழக்கு விசாரணை குறித்து நீதிமன்ற உத்தரவு samugammedia

Chithra / Aug 10th 2023, 8:11 am
image

Advertisement

 அண்மையில் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நேற்றைய தினம் (09) மீண்டும் அழைக்கப்பட்ட போது பொலிசார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகங்கள் சரியான இடத்தில் இருந்தமை மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளதால், அந்த உண்மைகளை கருத்திற் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.

குறித்த குழந்தையின் அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையில் உள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொரளை பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் உயிரிழந்த குழந்தையின் தந்தை மொஹமட் நிசார் மொஹமட் ஃபாஸ்லிம் சாட்சியமளித்தார்.

மேலும் சாட்சிய விசாரணை எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை - வழக்கு விசாரணை குறித்து நீதிமன்ற உத்தரவு samugammedia  அண்மையில் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நேற்றைய தினம் (09) மீண்டும் அழைக்கப்பட்ட போது பொலிசார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகங்கள் சரியான இடத்தில் இருந்தமை மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளதால், அந்த உண்மைகளை கருத்திற் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.குறித்த குழந்தையின் அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையில் உள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் பொரளை பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் உயிரிழந்த குழந்தையின் தந்தை மொஹமட் நிசார் மொஹமட் ஃபாஸ்லிம் சாட்சியமளித்தார்.மேலும் சாட்சிய விசாரணை எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement