• May 02 2024

இலங்கையின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதம்..! samugammedia

Chithra / Jul 24th 2023, 11:52 am
image

Advertisement

சீனாவுக்குக் கொடுக்க வேண்டிய கடன் சுமையின் காரணமாக இலங்கை சமீப காலங்களில் ஒரு பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ளது.

நாடு அதிகரித்து வரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அரசாங்கம் மக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவற்றில் கைவைக்கும் தீவிர நடவடிக்கைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நடவடிக்கை ஏழைகளின் நலன் குறித்த கவலையை எழுப்பியுள்ளது, அவர்கள் தமது எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த நிதியையே நம்பியுள்ளனர். கடனை மறுசீரமைப்பதில் சீனா தயங்குவதால், நிலைமை இன்னும் மோசமாகி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளித்துள்ள சீனா, இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முதலீடுகள் அதிக வட்டியுடனான கடன்களாகவே கிடைத்துள்ளன, அக்கடன்களை இலங்கை இப்போது திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. கடன் பொறுப்புகள் குவிந்து கிடப்பதால், நாடு தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தாத அபாயத்தை எதிர்கொள்கிறது.

இலங்கை மோசமான பொருளாதார நிலைமை எதிர்கொள்வதாக இருந்தபோதிலும், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு சீனாவின் பதில் மெதுவாகவும் உறுதியற்றதாகவும் உள்ளது. உடனடி நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, கடனை மறுசீரமைப்பதற்கு சாதகமான நிபந்தனைகளை வழங்க சீனா தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது, இதனால் இலங்கையின் நிதி நெருக்கடி நீடிக்கிறது.

இந்த தாமதம் இலங்கை அரசாங்கத்திற்கு வரையறுக்கப்பட்ட உள்நாட்டு சேமிப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கை அரசாங்கம் தனது குடிமக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் கைவைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது குடிமக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை உடனடி கடன் சுமைகளை சந்திக்க பயன்படுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மனமானது ஓய்வூதியம், அவசரநிலை மற்றும் எதிர்காலத்திற்காக இந்நிதியை பெரிதும் நம்பியிருக்கும் ஏழைகளுக்கு இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலன்கள் ஆபத்துக்கு உள்ளாவதுடன் பிற்காலங்களில் அவர்களுக்கான நிதி ஸ்திரத்தன்மை குறித்தும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

சரியான நேரத்தில், விரிவான கடன் மறுசீரமைப்பு விவாதங்களில் ஈடுபடுவதற்கு சீனா தொடர்ச்சியாக தயக்கம் காட்டுவது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையில் சுமையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகளையும் அச்சுறுத்துகிறது.

கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வு இல்லாதது, நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்புக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கான நாட்டின் திறனைத் தடுக்கிறது.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் மெதுவான வேகம் இலங்கையை முட்டுச்சந்துக்குள் தள்ளுகிறது, இதனால் இலங்கை அரசாங்கத்தின் குறுகிய நோக்குடைய அணுகுமுறை ஏழைகள் மீது நியாயமற்ற சுமையை ஏற்றுகிறது.

குடிமக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடன் நெருக்கடிக்கு சாத்தியமான மற்றும் சமமான தீர்வைக் கண்டறிவது சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இன்றியமையாததாகும். 

கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.


இலங்கையின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதம். samugammedia சீனாவுக்குக் கொடுக்க வேண்டிய கடன் சுமையின் காரணமாக இலங்கை சமீப காலங்களில் ஒரு பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ளது.நாடு அதிகரித்து வரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அரசாங்கம் மக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவற்றில் கைவைக்கும் தீவிர நடவடிக்கைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இந்த நடவடிக்கை ஏழைகளின் நலன் குறித்த கவலையை எழுப்பியுள்ளது, அவர்கள் தமது எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த நிதியையே நம்பியுள்ளனர். கடனை மறுசீரமைப்பதில் சீனா தயங்குவதால், நிலைமை இன்னும் மோசமாகி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த சில தசாப்தங்களாக, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளித்துள்ள சீனா, இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.எவ்வாறாயினும், இந்த முதலீடுகள் அதிக வட்டியுடனான கடன்களாகவே கிடைத்துள்ளன, அக்கடன்களை இலங்கை இப்போது திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. கடன் பொறுப்புகள் குவிந்து கிடப்பதால், நாடு தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தாத அபாயத்தை எதிர்கொள்கிறது.இலங்கை மோசமான பொருளாதார நிலைமை எதிர்கொள்வதாக இருந்தபோதிலும், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு சீனாவின் பதில் மெதுவாகவும் உறுதியற்றதாகவும் உள்ளது. உடனடி நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, கடனை மறுசீரமைப்பதற்கு சாதகமான நிபந்தனைகளை வழங்க சீனா தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது, இதனால் இலங்கையின் நிதி நெருக்கடி நீடிக்கிறது.இந்த தாமதம் இலங்கை அரசாங்கத்திற்கு வரையறுக்கப்பட்ட உள்நாட்டு சேமிப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இலங்கை அரசாங்கம் தனது குடிமக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் கைவைத்துள்ளது.இலங்கை அரசாங்கம் தனது குடிமக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை உடனடி கடன் சுமைகளை சந்திக்க பயன்படுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மனமானது ஓய்வூதியம், அவசரநிலை மற்றும் எதிர்காலத்திற்காக இந்நிதியை பெரிதும் நம்பியிருக்கும் ஏழைகளுக்கு இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலன்கள் ஆபத்துக்கு உள்ளாவதுடன் பிற்காலங்களில் அவர்களுக்கான நிதி ஸ்திரத்தன்மை குறித்தும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.சரியான நேரத்தில், விரிவான கடன் மறுசீரமைப்பு விவாதங்களில் ஈடுபடுவதற்கு சீனா தொடர்ச்சியாக தயக்கம் காட்டுவது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையில் சுமையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகளையும் அச்சுறுத்துகிறது.கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வு இல்லாதது, நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்புக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கான நாட்டின் திறனைத் தடுக்கிறது.சீனாவின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் மெதுவான வேகம் இலங்கையை முட்டுச்சந்துக்குள் தள்ளுகிறது, இதனால் இலங்கை அரசாங்கத்தின் குறுகிய நோக்குடைய அணுகுமுறை ஏழைகள் மீது நியாயமற்ற சுமையை ஏற்றுகிறது.குடிமக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடன் நெருக்கடிக்கு சாத்தியமான மற்றும் சமமான தீர்வைக் கண்டறிவது சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இன்றியமையாததாகும். கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

Advertisement

Advertisement

Advertisement