• May 18 2024

சீனாவின் ஒரு பாதை திட்டத்தால் அமெரிக்கா அமைச்சமடைந்துள்ளது:சபையில் சீனப்புகழ் பாடும் எம்.பி!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 12:18 pm
image

Advertisement

சீனாவின் 'ஒரு பாதை - ஒரு மண்டலம்' என்ற செயற்திட்டம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பா நாடுகள் சீனாவில் இந்த பெருந்திட்டத்தை கண்டு அஞ்சியுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இந்த திட்டத்தின் முக்கிய மையங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய பயன் காத்திருப்பதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.

உலகத்தில் டொலர் இருப்பின் சொந்தக்காரர்கள் அமெரிக்க இல்லை என்றும் அது சீனா என்றும் குறிப்பிட்டார்.துறைமுக நகரத்தை இலங்கையின் பலமாக தொழில் சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மாற்றிகொள்ளவேண்டும் என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகரம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

உலக வர்த்த மையமாக சிங்கப்பூர் தற்போது பரிணமித்து உள்ளதாகவும் அதேபோன்று உச்சத்தை தொடுவதற்கான வளங்கள் இலங்கையில் உள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஒரு பாதை திட்டத்தால் அமெரிக்கா அமைச்சமடைந்துள்ளது:சபையில் சீனப்புகழ் பாடும் எம்.பிSamugamMedia சீனாவின் 'ஒரு பாதை - ஒரு மண்டலம்' என்ற செயற்திட்டம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பா நாடுகள் சீனாவில் இந்த பெருந்திட்டத்தை கண்டு அஞ்சியுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.இந்த திட்டத்தின் முக்கிய மையங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய பயன் காத்திருப்பதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.உலகத்தில் டொலர் இருப்பின் சொந்தக்காரர்கள் அமெரிக்க இல்லை என்றும் அது சீனா என்றும் குறிப்பிட்டார்.துறைமுக நகரத்தை இலங்கையின் பலமாக தொழில் சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மாற்றிகொள்ளவேண்டும் என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.துறைமுக நகரம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.உலக வர்த்த மையமாக சிங்கப்பூர் தற்போது பரிணமித்து உள்ளதாகவும் அதேபோன்று உச்சத்தை தொடுவதற்கான வளங்கள் இலங்கையில் உள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement